குபேரா திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த குபேரா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் மொத்த பட்ஜெட் 120 கோடி என கூறப்படும் நிலையில், பெரிய அளவிலான போட்டிப் படங்கள் எதுவும் இல்லாததால், குபேரா படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதையும் படியுங்கள் : ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்க எண்ணெய் விலை உயர்வு..