2026 ஆம் ஆண்டில் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் கௌரவத்தைப் பெற்றவர்களில் நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றுள்ளார். ஜூலை 2ஆம் தேதி ஹாலிவுட் வர்த்தக சபை வெளியிட்ட ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் பட்டியலில் தீபிகா படுகோன், மைலி சைரஸ், டிமோதி சலமெட், ஹாலிவுட் நடிகை எமிலி பிளண்ட், பிரெஞ்சு நடிகை கோட்டிலார்ட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம், மோஷன் பிக்சர் பிரிவில் இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகான் படுகோன் பெற்றுள்ளார்.