ஜிவி.பெருமாள் தயாரித்து இயக்கியுள்ள சரீரம் திரைப்படம் செப்டம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுகங்கள் தர்ஷன் மற்றும் சார்மி இணைந்து இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். காதலுக்காக பாலினத்தையே மாற்றிக் கொள்ளும் ஜோடிகளை சமூகம் ஏற்றுக் கொண்டதா இல்லையா என்ற கருத்தை மையமாக வைத்து சரீரம் திரைப்படம் உருவாகியுள்ளது.