கும்கி 2 திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான நட்பு மற்றும் பிணைப்பை பற்றிய அழகான கதை என்றும், கும்கி -2 திரைப்பட குழுவினர் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார். கும்கி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரபுசாலமன், ஒளிப்பதிவாளர் சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து கும்கி 2 திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நவம்பர் 14-ஆம் தேதி கும்கி-2 திரைப்படம் வெளியாகிறது.