கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மனுஷி திரைப்படத்திற்கான தணிக்கை பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் கூறினார். இந்திய சினிமா வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதி திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்த்துவிட்டு, தணிக்கை குழுவிடம் பேசி 12 இடங்களில் மட்டுமே சில காட்சிகளில் கட் செய்ய பரிந்துரைத்ததாக கூறினார். மனுஷி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும், MASK திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் முடித்த பின்னர் மனுஷி-யின் வெளியீட்டு தேதி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் வெற்றிமாறன் கூறினார்.