வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பேட் கேர்ள் திரைப்படம், செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்து, இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஆனாலும் கோவாவில் நடைபெற்ற 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது குறிப்பிடத்தக்கது.