பப்புவா நியூ கினியா நாட்டிலிருந்து முதல் முறையாக திரைப்படம் ஒன்று ஆஸ்கருக்குத் தேர்வாகியுள்ளது. டாக்டர். பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் பாபா புகா ((papa puka)) என்ற இந்தப் படத்தை அக்ஷய் குமார் பரஜியா, பா.இரஞ்சித், பிரகாஷ் பாரே, நோலீன் டௌலா வுனம் ((Noelene Taula Wunum)) ஆகியோர் தயாரித்துள்ளனர். பப்புவா நியூ கினியா நாட்டிலிருந்து முதல்முறையாக 98-ஆவது ஆஸ்கருக்கு பாபா புகா ((papa puka)) படம் தேர்வாகியுள்ளதால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.