மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி நடிப்பில் உருவாகியுள்ள 'ஆசாதி' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு\ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயகுமார், ரவீனா ரவி, டிஜி ரவி, ராஜேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.