இயக்குனர் அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ,தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில், ஜவான் என bollywood வரை சென்று பல வெற்றி படங்களை கொடுத்து விட்டார். தற்போது sun pictures தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் .ஏற்கனவே SRKவை இயக்கியதன் மூலமாக North இந்தியன் ரசிகர்களின் அபிமான இயக்குனராக மாறிய அட்லீ, இந்த படத்தின் மூலம் Tollywood-யிலும் பட்டையை கிளப்ப போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரது அடுத்த படத்தை பற்றிய செய்தி கசிய தொடங்கியுள்ளது. கேஜிஎப் படத்திற்கு பிறகு இந்தியஅளவில் பேசப்படும் நடிகராக நடிகர் யாஷ் மாறிவிட்டார். அவர் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் மற்றும் ஹிந்தியில் ராமாயணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராமாயணம் படத்தில் அவர் இராவணன் ஆக நடிக்கிறார். இந்நிலையில் யாஷ் மற்றும் அட்லீ இருவரும் ஒரு புது படத்திற்காக கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் pan India படமாக உருவாகிறதாம்.இதையும் படியுங்கள் : Climax காட்சியால் வீங்கிய கால்கள்