ரஜினி காந்த் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அண்ணாமலை திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி அவரது பிறந்த நாளையொட்டி மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் குஷ்பு, மனோரமா, ஜனகராஜ், ராதாரவி, சரத்பாபு எனப் பலரும் நடித்துள்ளனர். இயக்குநர் பாலச்சந்தர் தயாரித்துள்ள இந்த படம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் 4-கே தரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.