கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தக்லைப் பட விழாவில் கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை கிளப்பியதையடுத்து கர்நாடகாவில் படத்தை திரையிடவும் எதிர்ப்புகள் வந்தன. இதனிடையே கன்னட மக்களின் உணர்ச்சிகளை அவரது பேச்சு புண்படுத்திவிட்டதாக பெங்களூரு நீதிமன்றத்தில் கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கன்னட மொழி, கலாச்சாரம், நிலம், இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை விதித்தது. மேலும் கமல்ஹாசன் பதிலளிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.