பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிப்பில் வெளியான ‘ஹவுஸ் புல் 5’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இயக்குநர் தருண் மன்சூகானி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பாஜ்வா, ஜாக்கி ஷெராப், சஞ்சய் தத் உள்ளிட்ட 24 நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.