நடிகை திரிஷா மொரோக்கா நாட்டுக்கு தனது தோழிகளுடன் சுற்று பயணம் சென்றுள்ளார். கோட் படத்திற்கு பின்னர் நடிகை திரிஷா, தனது தோழியும், கோட் படத்தின் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இதர தோழிகளுடன் மொராக்கோ சென்றுள்ளார். அங்கு பாராசூட்டில் பறந்த புகைப்படங்கள் மற்றும் தோழிகளுடன் எடுத்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் திரிஷா பதிவேற்றம் செய்துள்ள நிலையில், ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.