இயக்குநர் ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் மந்தாகினி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கும்பா எனும் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பெயர் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட உள்ளது.