UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் இந்திய தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் குழந்தைகளுக்கான UNICEF-ன் தூதராக இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக வளரவும், கனவு காணவும் தகுதியானது எனக் கூறிய அவர், UNICEF-ன் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.