லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு தனது குரலில் டப்பிங் செய்தது புது அனுபவம் என நடிகை கீர்த்தி ஷெட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு அப்படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி தனது குரலில் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்துள்ளார். இது குறித்து தன் உண்மையான குரல் மூலம் கதாபாத்திரத்தை வாழவைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை தருவதாகவும், ரசிகர்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுவது திருப்தி அளிப்பதாகவும் கூறினார்.