நடிகை டிஸ்கோ சாந்தி, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ”புல்லட்” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்குத் திரும்பியுள்ளார். தமிழ் திரையுலகில், 1980 மற்றும் 90 காலங்களில் பிரபல நடிகையாக வலம் வந்த டிஸ்கோ சாந்தி, தற்போது இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், அவரது தம்பி எல்வின் ஆகியோர் நடிக்கும், புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தப் புதிய படத்தில், குறி சொல்லும் பெண்ணாக நடிகை டிஸ்கோ சாந்தி நடித்திருக்கிறார்.