சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உயிரிழந்துள்ளார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு உள்ளிட்ட வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில தினங்களாக ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நான்காம் கட்ட புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.