சித்தார்த் நடிப்பில் வெளியான "3 பிஎச்கே" திரைப்படத்தை பார்த்த நடிகர் சிம்பு படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், '3 பிஎச்கே' படத்தை பார்த்தேன் என்றும், உணர்வுபூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்து செல்லும் அழகான திரைப்படம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சித்தார்த் மற்றும் சரத்குமார் சிறப்பாக நடித்திருந்ததாகவும், இயக்குநர் ஸ்ரீகணேஷ் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.