நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களை இயக்குநர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 16 தேதி தெலங்கானாவில் உள்ள கோவில் ஒன்றில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில், இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ளாத மணிரத்னமும், கமல்ஹாசனும் பதிவு திருமணத்தின் போது நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.