பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமெனில் 5 கோடி ரூபாய் அளிக்க வேண்டுமென மர்ம நபர்கள், மும்பை டிராபிக் போலீசாருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜில், 5 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திகை விட நடிகர் சல்மான் கானின் நிலைமை மோசமாகிவிடும் என எச்சரித்துள்ளனர். மேலும் பணம் கொடுத்தால் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்குடனான மோதல் முடிவுக்கு வரும் எனவும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சல்மான் கானின் வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.