”இட்லி கடை” படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் தனுஷ் பைக்கில் சென்று படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தனுஷ் நான்காவதாக இயக்கி, நடிக்கும் ”இட்லி கடை” படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக பண்ணை வீட்டில் இருந்து கிளம்பிய தனுஷ், பைக்கில் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டி சென்றது விமர்சனத்துக்கு வித்திட்டுள்ளது.