நடிகர் தனுஷ் தனது 54ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் புரமோசனுக்காக மும்பை சென்றுள்ளார். இந்தியில் தனுஷ் - ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் வரும் 28-ம்தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் தனுஷுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.