ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில், புஷ்பா பட ரிலீஸின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த தெலுங்கு நடிகா் அல்லு அா்ஜுன், உள்ளூா் நீதிமன்ற விசாரணைக்கு காணொலி வாயிலாக நேற்று ஆஜரானாா். அவரது ஜாமீன் மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.