நடிகர் அஜித் மீண்டும் மோட்டார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு, 2025 -ம் ஆண்டில் நடைபெறும் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க அஜித் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.