பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எப் 1 போன்ற ஹாலிவுட் திரைப்படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். கார் ரேசில் முழு வீச்சில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எப் 1 போன்ற படங்களில் அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும், தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.