டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் மதன் இயக்கி, MRP Entertainment நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.