மெய்யழகன்" படப்பிடிப்பின் போது ஜல்லிக்கட்டை நேரில் பார்த்து ரசித்ததாகவும், அது சாதாரண விஷயம் அல்ல எனவும் நடிகர் கார்த்தி கூறினார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் "சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா" நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நாட்டு மாடு, ஆடு, நாய் வகைகளை பார்வையிட்டு, கலைஞர்களோடு நடனமாடி மகிழ்ந்தார்.