ராஜமௌலி-மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகி வரும் வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்கு வாரணாசி என பெயரிடப்பட்டுள்ளது. ஒடீசாவில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிருத்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் திரைப்படத்தின் டைட்டில்,பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.