தான் இயக்கி வரும் 7G ரெயின்போ காலனி-2 மற்றும் மெண்டல் மனதில் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் என இயக்குநர் செல்வராகவன் பேட்டி ஒன்றில் கூறினார். இரண்டும் வித்தியாசமான திரைப்படங்கள் என்றும் வேறு எதுவும் தற்போது சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார். திரையரங்குகளுக்கு சென்றாலே ஆயிரத்தில் ஒருவன்-2 எப்போது எடுக்க போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்பதால், திரைப்படங்களை ஓடிடி-யில் பார்த்து வருவதாக செல்வராகவன் கூறினார்.