கடந்த 8 மாதங்களில் உடல் எடையை 42 கிலோ குறைத்திருப்பதாக நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார். ரேஸிங்கிற்குள் வர வேண்டும் என்று முடிவெடுத்தவுடன், மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என தான் நினைத்ததாகவும், அதற்காக, டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.