பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது குறித்து அதன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், பாட்ஷா திரைப்படமே தங்களால்தான் ரஜினி என பெருமிதம் தெரிவித்தார். தங்களின் அசத்தலான நடிப்பும், திரையில் தோன்றிய விதமும், பாட்ஷாவில் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளீர்கள் என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினிக்கு புகழாரம் சூட்டினார். கல்ட் கிளாசிக் ஆன பாட்ஷா, சினிமா வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.