பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்து கொண்ட புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர். இந்நிலையில், தற்போது வசி என்பவருடன் பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.