ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டத்தில், இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தியும், தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தும், 4 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இந்திய அணி உள்ளது. இந்த நிலையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-ஆவது வெற்றி பெறுமா? என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்தியாவுக்கு மிகவும் சவாலானது. ஏனெனில், இதுவரை இரு அணிகளும் 59 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. அதில், இந்தியா 11-லிலும், ஆஸ்திரேலியா 48 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.