NCMC கார்டு என்றால் என்ன? NCMC கார்டு (நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு) நாடு முழுவதும் உள்ள பொது போக்குவரத்தில் சில்லறை விற்பனை நிலையங்களில் பயன்படுத்த கூடிய ஒரு அட்டையாகும். இந்த அட்டையை மாநகர பேருந்துகளிலும், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களிலும் பயன்படுத்தலாம். இந்த அட்டை ஒரே நாடு ஒரே அட்டை என்ற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. NCMC கார்டின் முழுவிவரம் : 1.Cardless payment 2.பல நகரங்களில் பயன்படுத்தலாம் : ஒரு நகரத்தில் வழங்கப்படும் NCMC அட்டைகளை பிற நகரங்களில் போக்குவரத்து மற்றும் சில்லறை கட்டணங்களுக்குப் பயன்படுத்தலாம். NCMC கார்டு பயன்கள் : இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதன் முக்கிய நோக்கமே ,டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பது. எளிய முறையில் மொபைல் ஆப்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். கார்டு வகைகள் : NCMC டெபிட் கார்டு, NCMC ப்ரீபெய்ட் கார்டு, NCMC கிரெடிட் கார்டு எப்படி இயங்குகிறது NCMC கார்டு :கார்டு உபயோகிப்பவர்கள் அண்மைத் தகவல் தொடர்பு அல்லது என்.எஃப்.சி (Near Field Communication - NFC chip ) என்ற முறையில் இயங்குகிறது. பண பரிவர்த்தனை இந்த NCMC கார்டு மூலம் பாதுகாப்பான முறையில் நடைபெறும். NCMC கார்டு பெறுவது எப்படி : புதிதாக மேம்படுத்தபட்ட NCMC கார்டு பேருந்து மற்றும் மெட்ரோ நிலையங்களின் விற்கப்படுகிறது. கார்டை வாங்கியபின் மறக்காமல் அப்டேட் செய்து கொள்ளவும் இல்லை என்றால் நாம் ரீசார்ஜ் செய்த பின்னும் வேலை செய்யாது. NCMC கார்டு ரீசார்ஜ் செய்வது எப்படி: ஏர்டெல் செயலியை ஓபன் செய்த உடன் NCMC என்று தேடுதல் செய்தல் NCMC என்று தோன்றும் அதில் கார்டு என்னை உள்ளிடவும். பின்னர் அதிலேயே உங்கள் பேலன்ஸ் பரிவர்த்தனை விவரங்களை காணலாம் பணம் செலுத்த விரும்பினால் அத்து ADD Money கிளிக் செய்து பணம் செலுத்தலாம்.