நம்மில் பலருக்கு முகத்தை அழகாக வைத்துக்கொள்ள மட்டும் தான் ஆசை இருக்கும். ஆனால் சருமம் ஆரோக்கியமாக இருந்தால் தான் அழகு என்ற விஷயமே வெளிப்படும் என்பது பெரும்பாலானோருக்கு புரிவதில்லை. வெளியில் இருந்து உடலில் ஏற்படும் பாதிப்புகள் தோலை கடந்து தான் உள்ளுருப்புகளை தாக்குகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சருமத்தினை எப்படி அழகாகவும் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதனை விளக்கி இருக்கிறார் மருத்துவ அழகியல் நிபுணர் மானசா. சூரியகதிர்களால் ,கருமை, பருக்கள் போன்றவை ஏற்படலாம் . எனவே இவற்றிலிருந்து பாதுகாக்க எந்த spf அளவு கொண்ட சன்ஸ்கீரின் உபயோகிப்பது, அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை டாக்டர் மானசா கூறியிருக்கிறார். கடையில் விற்கும் எந்த ஃபேஸ் வாஷ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்ற மனநிலையில் இருப்போர் அதனை தவிர்க்க வேண்டும். நமக்கு என்ன மாதிரியான தன்மை கொண்ட சருமம் என்பதனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் ஃபேஸ் வாஷ் தேர்வு செய்தல், முகத்தில் ஏற்படும் தேவையற்ற முகப்பரு உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க உதவும் என்றும் அவர் கூறியிருக்கிறார். சருமம் இளமையிலேயே முதிய தோற்றத்தினை அடைவதை தடுக்க மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும் , போதிய தூக்கம் , ஆரோக்கியமான உணவு முறை , கொலாஜன் உள்ளிட்டவைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக எந்த விதமான சிகிச்சை முறைகளையோ, கிரீம்களை உபயோகிப்பதோ, வீட்டு வைத்தியம் பார்ப்பதோ கூடாது என எச்சரிக்கிறார் மருத்துவர் மானசா.