சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களில் இத்திட்ட முகாம் நடத்தப்படுகின்றது. இம்முகாம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வாரம்தோறும் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 256 இடங்களில் நடத்தப்படுகின்றன. இம்முகாமில் மக்கள் முழு உடல் பரிசோதனை செய்துகொண்டு, அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த பரிசோதனையின் ரிசல்ட்டையும் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் ரத்தப் பரிசோதனை முதல் இசிஜி , எக்கோ ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தைகள் மருத்துவம், பெண்களுக்கான மருத்துவம் என 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் இம்முகாம்களில் பங்கேற்கின்றனர். முகாமிற்கு வருவோர் முதலில் ரத்தப் பரிதோனை அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர். பின்னர் ரத்த அணுக்கள் பரிசோதனை, ரத்த சர்க்கரை, யூரியா கிரியாட்டினின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரத்தப் பரிதோதனையை தொடர்ந்து இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் இரத்த நாளங்களை பார்க்க பயன்படும் எக்கோ ஸ்கேனும் எடுக்கப்படும்.பெண்களுக்கான எக்கோ , எக்ஸ்ரே , புற்றுநோய் பரிசோதனை , இசிஜி உள்ளிட்டவற்றுக்கு தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ரத்தம், இசிஜி பரிசோதனைகளை நிறைவு செய்த பின் காது , மூக்கு , தொண்டை , கண் , பல் , தோல் மருத்துவர்களை பயனாளிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அணுகும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கையுடன் பொது மருத்துவரை சென்று சந்தித்த பின்னர் சிறியளவிலான பிரச்சனைகளுக்கு பொது மருத்துவர்களே சிகிச்சை அளித்து அனுப்புகின்றனர். அதே நேரம் உடலில் ஏதேனும் நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் முகாம்களில் இருக்கும் சிறப்பு மருத்துவர்களை சந்திக்க அறிவுறுத்துகின்றனர். அரசு மருத்துவர்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளின் மூத்த மருத்துவர்களும் சிறப்பு மருத்துவர்களாக முகாம்களுக்கு வருகை தருகின்றனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிதாக இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகலுடன் தங்களை இணைத்துக் கொள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் உணவு பாதுகாப்பு துறை, எச்ஐவி உள்ளிட்ட பால்வினை நோய், காச நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. முகாமுக்கு வருவோருக்கு திடீர் உடல் சோர்வு , மயக்கம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை முதல் உயிர் காக்கும் அடிப்படை சிகிச்சைகள் வரை வழங்குவதற்கு தேவையான வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளுடன் அவசர சிகிச்சை அரங்கும் இடம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர்கள் உள்ளிட்டோருக்கு உதவ துறை சார்ந்து தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 'நலம் காக்கும் ஸ்டாலின் ' முகாமுக்கு செல்வோர் மூன்று மணி நேரத்திற்குள் தங்கள் முழு உடல் குறித்த பரிசோதனையை மேற்கொள்வதுடன், உரிய மருத்துவ அறிவுரையும் பெற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.' முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட'த்தில் புதிதாக இணைய விரும்புவோர் குடும்ப அட்டை , ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகலுடன் தங்களை இணைத்துக் கொள்ள முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .மேலும் உணவு பாதுகாப்பு துறை , எச்ஐவி உள்ளிட்ட பால்வினை நோய் , காச நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. முகாமுக்கு வருவோருக்கு திடீர் உடல் சோர்வு , மயக்கம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை முதல் உயிர் காக்கும் அடிப்படை சிகிச்சைகள் வரை வழங்குவதற்கு தேவையான வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளுடன் அவசர சிகிச்சை அரங்கும் இடம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் , ஆதி திராவிடர்கள் உள்ளிட்டோருக்கு உதவ துறை சார்ந்து தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் , தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் , தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் , உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறையினர் தங்கள் துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனி அரங்குகளை அமைத்துள்ளனர். 'நலங்காக்கும் ஸ்டாலின் ' முகாமுக்கு செல்வோர் மூன்று மணி நேரத்திற்குள் தங்கள் முழு உடல் குறித்த பரிசோதனையை மேற்கொள்வதுடன் , உரிய மருத்துவ அறிவுரையும் பெற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.