கரூர் துயர சம்பவத்த சிபிஐ விசாரணைக்கு மாத்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில, தவெகவோட தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா ‘ஆதாரத்த கொடுக்கப்போகிறோமுன்னு சொல்லியிருக்காரு. அதோட, செப்டம்பர் 27ம் தேதி இரவு நடந்தத பத்தியும் தன் தரப்பு விளக்கத்த சொல்லியிருக்காரு . தீர்ப்பு.. பேட்டி.. அப்டின்னு தவெக ஆக்டிவ் மோடுக்கு வர்ற நிலையில, அக்கட்சியோட Next Move என்னன்னு பார்க்கலாம். கரூர் பரப்புரை கூட்டத்துல 41 பேர் மரணித்த விவகாரத்த சிபிஐ விசாரிக்கட்டும்னு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அந்த விசாரணைய கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் போட்டிருக்கு. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு மேல எங்களுக்கு நம்பிக்கை இல்லன்னு தவெக கேட்ட நிலையில, கிட்டத்தட்ட அவங்களுக்கு சாதகமாதான் தீர்ப்பு வந்திருக்கு. இந்த தீர்ப்புக்குப் பிறகு, டெல்லியில வக்கீல்கள் புடைசூழ செய்தியாளர்கள சந்திச்ச ஆதவ் அர்ஜுனா, பல விஷயங்களை விவரிச்சிருக்காரு.. எங்க மேல தப்பு இருந்தா, கரூர் பார்டர்ல போலீஸ் எதுக்கு எங்கள வரவேத்தாங்கன்னு கேட்ட ஆதவ் அர்ஜுனா, எங்களுக்கு வழக்கறிஞர்கள் கூட கிடைக்கக்கூடாதுன்னு பல வேலைகள் நடந்ததா குற்றம்சாட்டியிருக்காரு.. அதோட, எல்லாரும் சொல்ற மாதிரி நாங்க அங்கிருந்து ஓடிடல.. கரூர் எல்லையிலேதான் காத்துக்கிட்டு இருந்தோம், ஆனா நீங்க வந்தா கலவரம் வந்துடும்னு காவல்துறைதான் எங்கள தடுத்தாங்க.. வேணும்னா எங்களோட செல்ஃபோன் நெட்வொர்க்க கூட ட்ராக் பண்ணலாம்.. இதுக்கான எல்லா ஆதாரத்தையும் உச்சநீதிமன்றத்துல சமர்ப்பிப்போம்னு சொல்லியிருக்காரு ஆதவ் அர்ஜுனா.. கரூர் விவகாரத்துல தங்களிடம் இருக்க எல்லா ஆதாரங்களையும் நீதிமன்றத்துல சமர்பிக்கப்போறதா சொன்ன ஆதவ், உயிர்ழந்தவங்களோட குடும்பங்கள விஜய் தத்தெடுக்க இருக்குறதாகவும், நிதியுதவி தர்றதோட வாழ்நாள் முழுக்க உறுதுணையா இருப்போம்னும் சொல்லியிருக்காரு. கரூர் மக்கள நேர்ல சந்திச்ச பிறகுதான் அடுத்தகட்ட அரசியல்னு விஜய் முடிவெடுத்ததா சொல்லப்படுற நிலையில, வர்ற 17ம் தேதி சந்திப்ப நடத்த தவெக தரப்பு மும்முரம் காட்டிக்கிட்டு வருது. விஜய்யோட சுற்றுப்பயணம் தற்காலிகமா 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு தவெக தரப்பு அரசியல் பணிகள தீவிரமாக்கும்னும் பனையூர் வட்டாரங்கள்ல தகவல் வெளியாகியிருக்கு