பிளாஸ்டிக் நிலப்பரப்பையும் சரி, நீர்ப்பரப்பையும் சரி அழிக்கக்கூடிய ஒரு பொருளா நம்ம பார்க்கப்பட்டாலும் தவிர்க்க முடியாத பல காரணங்களுக்காக நம்ம பிளாஸ்டிக் பயன்படுத்திட்டு வறோம்.... இது தெரிஞ்ச விஷயம் தான் ஆனா தெரியாத ஒரு விஷயத்தை பத்தி நம்ம இப்ப பாக்கலாம்..பிளாஸ்டிக்க உண்ணக்கூடிய பூஞ்சைகளை விஞ்ஞானிகள் அமேசான் காடுல கண்டுபிடிச்சிருக்காங்க இது பிளாஸ்டிக் க மட்டுமே உண்டு வாழ கூடியது.. ஆக்சிஜன் இல்லாம வாழக்கூடிய ஒரு காளான். அது எப்படி சாத்தியம் அப்படின்னு எழ கூடிய கேள்விகளுக்கு 2011 ஆம் ஆண்டு ஈக்வடார் ல உள்ள ஆராய்ச்சி மாணவர்கள் அமேசான் மழைக்காடு ல ஒரு அரிய வகை காளான கண்டுபிடிச்சாங்க..அது பெஸ்டலோடியோப்சிஸ் மைக்ரோஸ்போரா என்ற பூஞ்சை. வெற்று தோற்றமுடைய வெளிர் பழுப்பு நிறமா காணப்படும் .பிளாஸ்டிக் பொருட்கள்ல பொதுவான பாலிமர் ஆன பாலியூரித்தின் மீது வளரக்கூடியது.. ஆக்சிஜன் உள்ள அல்லது ஆக்ஸிஜன் இல்லாத சூழ்நிலையும் இது வாழக்கூடியது.. இந்த காளான் பிளாஸ்டிக் அதன் முக்கிய உணவாக உண்ணும் ஒரு பூஞ்சையா இருக்குது.. இந்த காளான்கள் தோல் , பேக்கேஜிங் ,மற்றும் கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஆற்றல் இந்த பூஞ்சைக்கு இருந்தாலும்....இந்த காளான்கள் ஆபத்தில் உள்ளன..இந்த ஒரு பூஞ்சை மட்டும் தான் இதுவரைக்கும் கண்டுபிடித்து இருக்காங்களா அப்படின்னு பார்த்தா இல்ல.. குஜராத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மைத் தளமான பிராணாவில் ஆராய்ச்சி குழு ஒன்று ஒரு சிறிய பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீரியாவை கண்டுபிடித்து இருக்கிறார்கள்... இந்த ஆய்வின் மூலமா 17 வகையான பாக்டீரியாக்களையும் பிளாஸ்டிக்கை உண்ணும் ஒன்பது பூஞ்சைகளையும் கண்டுபிடிச்சுருக்காங்க...அடுத்ததா 2017 ஆம் ஆண்டுல பாகிஸ்தான்ல உள்ள ஒரு பொது நகர கழிவுகள் அகற்றும் இடத்தில பிளாஸ்டிக் உண்ணும் மற்றொரு காளான்ன விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிச்சிருக்கு.. ஆஸ்பெர்ஜுலஸ் டியூபிங்கென்சிஸ் எனப்படும் இந்த பூஞ்ச இரண்டு மாதங்களுக்குள் பாலியஸ்டர் பாலி யூரின் மூலமா பிளாஸ்டிக் சிறிய துண்டுகளாக உடைக்கும்...மேலும் பிளாஸ்டிக் ah அழிக்கும் பூஞ்சைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுக்கொண்டு தான் இருக்கு....