Also Watch
Read this
சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்... சிஐடியு தொழிற்சங்கத்தினர் கைது
சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
Updated: Oct 02, 2024 07:35 AM
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனம்,
தொழிலாளர்கள் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், காவல்துறையினரை கொண்டு தொழிலாளர்களை அடக்க முயற்சிக்கும் வகையில் சாம்சங் நிர்வாகம் செயல்படுவதாக கூறி கண்டனம் தெரிவித்து, தமிழக முழுவதும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னையில், உயர்நீதிமன்றம் அருகில் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமையில், சாம் சங் நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டிப்பதாக கூறி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
தொழிலாளர் சங்கத்தை அங்கீகரிக்க கோரி, சாம்சங் நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கு எதிராக செயல்படுவதாக சாம்சங் நிறுவனத்தை கண்டித்து முழங்கங்கள் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் சாம்சங் நிறுவனத்தை கண்டித்தும், தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க கோரியும், சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில் திருவண்ணாமலையில் உள்ள மத்திய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும்மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
https://x.com/NewsTamilTV24x7/status/1841292540902871141
https://x.com/NewsTamilTV24x7/status/1841292540902871141SEE THIS:
https://x.com/NewsTamilTV24x7/status/1841376340617887830
சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் அடக்கு முறைக்கு கண்டனம் தெரிவித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் நெல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செயதனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved