16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பன்ஸி கூறியுள்ளார். இன்றைய இணைய உலகம் இளசுகளை மட்டுமல்லாம பெருசுகள் வரை கட்டிப்போட்ருக்கு. ஒரு செல்போனில் விரல் நுனியில் உலகத்தில் நடக்கக்கூடிய அனைத்தையுமே தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கும் நாம், நம்மை அறியாமல் அதற்கு அடிமையாகி கொண்டு வருவதுதான் நிதர்சன உண்மை.குறிப்பாக சொல்லனுனா ஒவ்வொருவரும் குறைந்தது ஏதேனும் ஒரு சமூக வலைதளத்திலாவது உலாவிக்கிட்டுதா இருக்கோம். அந்த வகையில தற்போது சிறார்களும், விளையாட்டுகளை மறந்து செல்ஃபோன் உபயோகிப்பதும், தங்களுக்கென சமூகவலைதளங்கள அக்கவுண்ட் கிரேயேட் செய்து அதிக நேரங்களை சமூக வலைதளத்தில் செலவிட்டு வருகின்றனர்.இதனால குழந்தைகளின் உடல் நலனிலும், மன நலனிலும் அதிகப்படியான பாதிப்புகளை சந்திச்சிட்டு வரறதா பரவலாக பேச்சு எழுந்துருக்கு. இதனால சமூக வலைதளங்கள்ல மூழ்கி இருக்கும் தங்களது பிள்ளைகளை மீட்டெடுப்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக மாறியிருக்குனே சொல்லலாம். இந்த மாதிரியான ஆபத்துகள்ல இருந்து சிறார்களை தற்காப்பதற்காவும், சிறார்கள் சமூக வலைதளங்கல பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்காகவும் பெற்றோர்களின் தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில புதிய முயற்சியை எடுக்க முன்வந்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலகி, விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் அவர்களை பார்க்க விரும்புவதாகவும், குழந்தைகள் அவர்களது சிறு வயது வாழ்க்கையை அனுபிவிக்கனும்னும் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவிச்சிருக்காரு. மேலும் சமூக ஊடகங்களில் உள்ள பல விஷயங்கள், குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிப்பதா அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவிச்சிருக்காரு. இதனால 16 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் சமூகவலைதளங்களை உபயோகிக்க தடை விதித்து இந்த ஆண்டு சட்டம் கொண்டுவரப்படும் எனவும், அதற்கு முன்பாக வயது வரம்பு சரிபார்பு குறித்து முன்னோட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்ருக்கு.. இந்த மாதிரியான சட்டங்கள் நம்ம நாட்டுலயும் வந்தா எப்படி இருக்கும்னு இணையவாசிகள் பலர் இதற்கு கருத்து தெரிவிச்சுகிட்டும் வராங்க.