ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் எழுப்பியுள்ளார்.இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல எனக் கூறியுள்ள அவர், மத்தியில் 1977ஆம் ஆண்டு முதல் கூட்டணி ஆட்சி நடைபெறுவதாகவும், 2016ஆம் ஆண்டு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து தந்ததாகவும் தெரிவித்து, நெருப்பை பற்ற வைத்துள்ளார்.