ரயில்வே கேட் திறந்தே தான் இருந்தது என ஓட்டுநர் தொடங்கி, பொதுமக்கள் வரை மொத்த பேரும் ஒரே மாதிரி கூறும் நிலையில், ரயில்வே நிர்வாகம் பள்ளி வேன் ஓட்டுநர் மீதும் பழியை சுமத்தியதோடு, விபத்து நிகழ்ந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக அனுமதி வழங்கவில்லை என ஆட்சியர் மீதும் குற்றம் சாட்டியிருப்பது, பிரச்சனையை திசை திருப்ப பார்ப்பதாக ரயில்வே துறை மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்த பிள்ளைகள் இப்படி பிணக்கூடத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு பார்த்து கதறி துடிக்கும் இந்த பெற்றோரின் பரிதவிப்புக்கு என்ன பதில் சொல்வது...!கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் என்ற மெட்ரிக் பள்ளியின் வேன் மீது பயணிகள் ரயில் வேகமாக வேன் மீது மோதியது. ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது ரயில் மோதிய நிலையில், பயங்கர சத்தத்துடன் 50 மீட்டர் தூரத்திற்கு வேன் இழுத்துச் செல்லப்பட, வேனுக்குள் இருந்த மாணவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநரும், மற்றொரு மாணவனும் பலத்த காயம் அடைந்தனர். இந்த நிலையில், விபத்துக்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், லெவல் கிராஸிங்கில் இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ஆழ்ந்த உறக்கத்தில் அலட்சியமாக செயல்பட்டது தான் காரணம் என புகார் கூறப்படுகிறது. விபத்து நிகழ்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதே கிராஸிங்கை ரயில் ஒன்று கடந்து சென்றிருக்கிறது. அப்போதும், கேட் மூடப்படாமலேயே இருந்திருக்கிறது. ரயில்வே கேட்டை மூடி, திறக்கும் வேலைக்காக மட்டுமே பணியில் இருக்கும் கேட் கீப்பர், அந்த வேலையை கூட செய்யாமல் அலட்சியமாக தூங்கிக் கொண்டிருந்தது, 3 பேரின் உயிர்களை பறித்து இருக்கிறது.அந்த கேட் கீப்பர் வழக்கமாகவே தூங்கிக் கொண்டும், செல்போன் பயன்படுத்திக் கொண்டும் அஜாக்கிரதையாக தான் செயல்படுவார் என பொது மக்கள் புகார் கூறும் நிலையில், சம்பவத்தன்றும் அதே மாதிரியான நிகழ்வுகள் தான் விபத்துக்கு வழிவகுத்துள்ளது. அதேபோல, கிராம மக்கள் பேசும் போது மொழி தெரியாதவர்களை பணியில் அமர்த்தியிருப்பதும் பிரச்ச னையாக இருப்பதாக புகார் கூறிய நிலையில், அந்த புகாரும் கவனத்திற்குள்ளாகியுள்ளது.செலவு குறைப்பு என்ற பெயரில் அனுபவம் இல்லாத, தொழில்நுட்பம் தெரியாத சில வட மாநில தொழிலாளர்களை அழைத்து வந்து ஒப்பந்தம் எனக் கூறி GATE KEEPER போன்ற பணிகளில் அமர்த்துவது தான் இது மாதிரி கோர விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. அவசர காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் கூட இல்லாத ஆட்களை, ஒப்பந்த அடிப்படையில் சொற்ப சம்பளத்திற்கு அழைத்து வந்து பணியில் அமர்த்தினால், பள்ளி வேன் மீது மோதிய கொடூர நிகழ்வுகளை கட்டுப்படுத்த முடியாது என எச்சரிக்கை தான் எழுகிறது. தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் வேலைக்கு எடுக்கப்படும் இந்த மாதிரி ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான பயிற்சி கூட அளிக்கப்படாதது தான் விபரீதத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு ரயில் நிலையத்தில் இருந்து அடுத்த ரயில் நிலையத்திற்கு ரயில் செல்லும் போது, சிக்னல் கொடுக்கப்படும்...! இது போன்ற லெவல் கிராஸிங்கில், அருகே இருக்கும் ரயில் நிலையத்தில் இருந்து தகவல் கொடுக்கப்படும்...அந்த தகவலின் அடிப்ப டையில் தான் கேட் மூடப்படும் என்ற நிலையில், ரயில் நிலையத்தில் இருந்து முறையாக தகவல் கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. தகவல் கொடுத்தும் கூட அந்த கேட் கீப்பர் தூங்கிக் கொண்டு இருந்தாரா? அல்லது தகவலே கொடுக்கப்படவில்லையா? என்பதும் சந்தேகமாக உள்ளது. கேட் கீப்பர் தொலை பேசியை எடுத்து பதில் கொடுக்கவில்லை என்றால், ரயிலை அனுமதித்திருக்கக் கூடாது என்ற நிலையில், கேட் கீப்பர் பதில் சொன்னாரா? என்ன நடந்தது? என்ற வினாவும் எழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இந்த துயரத்திற்கு கேட் கீப்பர்தான் காரணம் என கிராம மக்கள் மொத்த பேரும் குற்றம்சாட்டும் நிலையில், பதிலுக்கு ரயில்வே நிர்வாகமோ முரண்பாடாக ஒரு விளக்கத்தை கொடுத்து உள்ளது. அந்த விளக்கத்தில், நேரம் ஆகிவிட்டதாக கூறி பள்ளி வேனின் ஓட்டுநர் தான் கேட்டை திறக்க சொல்லி வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லைவேஇல்லை என காயமடைந்த ஓட்டுநர் தொடங்கி, விபத்தை நேரில் பார்த்த மாணவன் என எல்லாருமே கூறும் நிலையில், அதற்கு மாறாக தெற்கு ரயில்வே கொடுத்த விளக்கமும் சந்தேகத்தை ஏற்படுத்தி, மூன்று பேரின் பலிக்கு ரயில்வே துறை தான் காரணமா? என கேள்வி எழுப்ப வைத்துள்ளது. இவையெல்லாவற்றையும் விட, பள்ளி வேன் மீது ரயில் விபத்து நிகழ்ந்த சம்பவத்தை காரணம் காட்டி, கடலூர் மாவட்ட நிர்வாகம் மீதும் தென்னக ரயில்வே புகார் கூறி திடுக்கிட வைத்துள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ஓராண்டாக மாவட்ட நிர்வாகத்திடம் ரயில்வே நிர்வாகம் அனுமதி கோரி வந்திருக்கிறது. ஆனால், அனுமதி கொடுக்காததால் தான், சுரங்கப்பாதை இன்னும் அமைக் க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டியது. இதற்கு விளக்கம் அளித்த ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ரயில்வே துறை புகாருக்கு ஆவணங்கள் அடிப்படையில் உரிய பதிலளிக்கப்படும் என்றார். அதோடு, விபத்து நிகழ்ந்த லெவல் கிராஸிங்கில் இண்டர்லாக்கிங் இல்லாததால் தான் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதிகப்படியான சாலை போக்குவரத்து இருக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கிராஸி ங்கில் இண்டர்லாக்கிங் முறை இருக்கும்...! இண்டர்லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால், சிவப்பு நிற விளக்கு எரிந்து ரயிலுக்கு சிக்னல் கொடுக்கும்...! அதேபோல, ரயில்வே கிராஸிங் மூடப்பட்டால் பச்சை நிற விளக்கு எரிந்து ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்படும்...! அப்படி இண்டர்லாக்கிங் தொழில்நுட்பம் இருந்திருந்தால், சிக்னலை பொருத்து ரயில் இடையிலேயே நின்றிருக்கும் என சொல்கிறார்கள்...!கடலூர் ரயில் விபத்திற்கு இண்டர்லாக்கிங் சிஸ்டம் இல்லாததே காரணம்; ஆனால் நாடு முழுவதும் 7,388 ரயில்வே கிராசிங்களில் இந்த சிஸ்டம் இல்லை என்கிறது புள்ளி விவரங்கள்! கடலூரில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு காரணம் இன்டர்லாக்கிங் சிஸ்டம் குறிப்பிட்ட ரயில்வே கிராசிங்கில் இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இன்று விபத்து நிகழ்ந்துள்ள செம்மங்குப்பம் ரயில்வே கிராசிங்கை போல் நாடு முழுவதும் 7,388 ரயில்வே கிராசிங்களில் இன்டர்லாக்கிங் சிஸ்டம் இல்லை என்பது மத்திய ரயில்வே அமைச்சகத்தின் பதில்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ரயில் செல்லும் வழித்தடம் பாதுகாப்பானது இல்லை என்பதை அறிந்தால் உடனடியாக ரயில் மேற்கொண்டு இயக்கக் கூடாது என்ற சிக்னலை வழங்கும் சிஸ்டமே இன்டர்லாக்கிங் சிஸ்டம் ஆகும். தமிழ்நாட்டில் 1,335 லெவல் கிராசிங் உட்பட நாடு முழுவதும் 18,477 லெவல் கிராசிங் உள்ள நிலையில்இதில்11,089 லெவல் கிராசிங்களில் மட்டுமே இன்டெர்லாக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது என்பது மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வழங்கியுள்ள புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.