காரைக்கால் கடற்கரையில் இளம் காதல் ஜோடியை மிரட்டி GPAY மூலமாக காவலர் ஒருவர் ரூபாய் 3 ஆயிரம் வாங்கியதாக கூறப்படும் நிலையில் காதலியிடம் காவலர் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.கடற்கரைக்கு வந்த காதலனின் தாய் மற்றும் நண்பர்கள் காவலரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலரே எல்லைமீறுவதா என பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்..