Also Watch
Read this
நடுரோட்டில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. பழிக்குப்பழியா? பழைய பகை என்ன?
ரவுடி வெட்டிக் கொலை
Updated: Oct 01, 2024 01:20 PM
திண்டுக்கல் அருகே பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 24 வயது பிரபல ரவுடி முகமது இர்ஃபான். இவர் தனது நண்பர்களான முகமது அப்துல்லா, முகமது மீரான் இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்பென்சர் காம்பவுண்டு பகுதிக்கு வந்துள்ளார். இவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 7-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் முகமது இர்பான் மற்றும் முகமது அப்துல்லா ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் இர்ஃபான் முகம் சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முகம் சிதைந்து கிடந்த இர்பானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த முகமது அப்துல்லா மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட முகமது இர்பானும், முகமது அப்துல்லாவும் திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்பதும் அதிலும் முகமது இர்பான் மீது கொலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
எனவே பட்டறை சரவணனின் ஆதரவாளா்கள் பழிக்கு பழியாக இந்த கொடூர கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் ஒருபுறம் விசாரணை நடந்து வரும் நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தனிகவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே முகமது அப்துல்லாவும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அவர் சிகிச்சையில் உள்ள மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நியூஸ் தமிழ் செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பிரேம்குமாருடன் மிதார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved