மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை இ கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை இ கிளாஸ் மாடலின் விலை 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் பவர்டிரெயினை பொருத்தவரை இந்த கார் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.