அப்ரிலியா நிறுவனம் SR 175 என்ற புதிய மாடல் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. SR 160 மாடலுக்கு மாற்றாக புதிய SR 175 மாடல் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோகார் இணையதளத்தின் தகவலின்படி புதிய அப்ரிலியா SR 175 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ஒரு லட்சத்து 31 ஆயிரமாக இருக்கும் என கூறப்படுகிறது.