சுசுகி நிறுவனம் தனது வி.ஸ்ட்ரோம் 800 டி.ஈ. பைக்கில் OBD - 2B விதிகளுக்கு பொருந்தும் வகையில் புதிய நிறத்துடன் அப்டேட் செய்துள்ளது. அதன் படி, நீல நிற ஸ்போக்டு விளிம்புகளுடன் புதிய பேர்ல் டெக் ஒயிட் நிறத்திலும், அதே நேரத்தில் சாம்பியன் எல்லோ நம்பர் 2 நிறத்திலும் கருப்பு நிற பாடி பேனல்கள் மற்றும் நீல நிற விளிம்புகள் பொருத்தப்பட்டு புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது.