இந்த ஆண்டு இந்தியாவில் புதிய 125சிசி பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக் பல்சர் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது, பல்சர் 125 மற்றும் NS125 மாடல்களின் இடைப்பட்ட விலையில் இந்த பைக்கை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.