இந்தியாவில் பல்வேறு நவீன வசதிகளுடன் Kia நிறுவனத்தின் Carens Clavis கார் அறிமுகமாகியுள்ளது. ஆரம்ப விலை 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த காரில், காற்றோட்டமான முன் இருக்கைகள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட AC வென்ட்கள் மற்றும் தானியங்கி ஏர் கண்டிஷனிங்கிற்கான கட்டுப்பாடுகள், இரட்டைப் பலகை பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.